கள்ளச்சாராயத்தால் 40 பேர் பலி.. "நிதீஷ்குமார் ராஜினாமா செய்ய வேண்டும்" - மத்திய அமைச்சர்

x

பீகாரில் கள்ளச்சாரயத்தால் 40 பேர் உயிரிழந்த விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், முதலமைச்சர் நிதீஷ் குமார் ராஜனாமா செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் வலியுறுத்தியுள்ளார்.

பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டதால், பல ஆயிரம் பேர் இறந்துள்ளதாகவும், அதில் பெரும்பாலும் ஏழைகள் என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், உயிரிழப்பை பிகார் மாநில அரசு மறைத்த‌தாக மத்திய இணை அமைச்சர் ராய் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், முதலமைச்சர் நிதீஷ் குமார், பீகார் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்