கரூரில் விஷவாயுத் தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரம் - அதிகாரி மீது பாய்ந்த நடவடிக்கை

x

கரூரில் கழிவுநீர்த் தொட்டியில் விஷவாயுத் தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில், மாநகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் தங்கமணி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சுக்காலியூரில் உள்ள காந்தி நகரில், கடந்த வாரம் கழிவுநீர் தொட்டி கட்டுமானப் பணிகளுக்காக கட்டப்பட்டிருந்த பலகைகளைப் பிரிக்க உள்ளே இறங்கிய 4 தொழிலாளர்கள், விஷவாயுத் தாக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து, கரூர் மாநகராட்சியில் அனுமதியின்றி கட்டப்படும் கட்டடங்கள் குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்யவும், கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளதாகவும் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்