இளைஞரை காரில் கடத்தி பலாத்காரம் செய்த 4 பெண்கள்.. கணவனை தடுத்த மனைவி - வெளியான பகீர் தகவல்

x

பஞ்சாபை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஊடகங்களிடம் ஒரு பரபரப்பான சம்பவம் குறித்து அதிர்ச்சியான தகவலை அளித்துள்ளார்.

அதன்படி ஜலந்தர் அருகே சாலையில் நடந்து சென்றபோது, 4 இளம்பெண்கள் முகவரி கேட்டதாகவும், பேச்சு கொடுத்தபடியே மயக்க மருந்து கொடுத்து காரில் கடத்தி சென்றதாகவும் கூறியுள்ளார்.

மேலும் கண்விழித்து பார்த்தபோது, போதை பொருள் கொடுத்து 4 பெண்களும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

ஆனால் பாலியல் வன்கொடுமை குறித்து போலீசாரிடம் புகார் அளிக்க வேண்டாம் என்று தனது மனைவி கூறியதாக இளைஞர் தெரிவித்துள்ளார். பெண்கள் மீது இளைஞர் ஒருவர் அளித்துள்ள பாலியல் குற்றச்சாட்டு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்