2 மாதங்களில் 4 முறை சம்பவம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸுக்கு வந்த சோதனை - வேகத்தில் அதிரடி மாற்றம் | Train

x

கால் நடைகள் மீது வந்தே பாரத் ரயில்கள் மோதி, விபத்துகள் ஏற்படுவது அதிகரித்துள்ளது.

முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள், ஐந்து வழித்தடங்களில் தற்போது இயக்கப்படுகின்றன.

எஞ்சின்கள் இல்லாமல், புறநகர் மின்சார ரயில்களைப் போல, பெட்டிகளுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள மின்சார மோட்டார்கள் மூலம் இயக்கப்படுகின்றன.

இதன் முகப்பில் ஓட்டுனர் அமரும் கேபின் அமைக்கப்பட்டுள்ளது.

ரயில் பாதைகளை மாடுகள் கடக்கும் போது, அவற்றின் மீது வந்தே பாரத் ரயில் மோதி விபத்து ஏற்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களில் நான்கு முறை இத்தகைய விபத்துகள், காந்திநகர் மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸுக்கு ஏற்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் கால்நடைகள் அதிகம் உள்ளதால், அங்கு அடிக்கடி இத்தகைய விபத்துகள் ஏற்படுகின்றன.

ஆனால் இந்த விபத்துகளில், வந்தே பாரத் ரயிலின் முகப்பு பகுதிக்கு சிறிய அளவில் சேதம் ஏற்பட்டாலும், ரயிலை தொடர்ந்து இயக்குவதற்கு அது தடையாக இருப்பதில்லை.

இதன் காரணமாக வந்தே பாரத் ரயில்கள் மணிக்கு 90 கிலோ மீட்டருக்கும் குறைந்த வேகத்தில் இயக்கப்படுகின்றன.


Next Story

மேலும் செய்திகள்