ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்ட டிரைவர்.. பேருந்தை பறிமுதல் செய்த போலீசார்

x

சேலத்தில் ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு போதைப்பாக்கு மூட்டையை கடத்திச் சென்ற தனியார் பேருந்து ஓட்டுனர், நடத்துனர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரில் இருந்து கம்பம் சென்ற அந்த பேருந்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதைப்பாக்கு கடத்தப்படுவதாக, கருப்பூர் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த அந்த பேருந்தை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அதில், கடைசி இருக்கைக்கு கீழே ஒரு மூட்டையில் 30 கிலோ போதைப்பாக்கு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த மூட்டையையும், பேருந்தையும் பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுனரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ஆயிரம் ரூபாய் கொடுத்து மூட்டையை தேனியில் உள்ள ஒருவரிடம் சேர்த்து விடும்படி கூறியதாக தெரிவித்தனர். இதையடுத்து பேருந்து ஓட்டுனர், நடத்துனர், மூட்டையை பெறவிருந்த ஆசிக், கண்ணன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்