4 மாணவிகள் மயக்கம் - பள்ளியின் தாளாளர் மீது வழக்கு... மதுரையில் பரபரப்பு சம்பவம்

x

மதுரை மாவட்டம் திருப்பாலை அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளிக்கு சொந்தமான பேருந்து ஒன்று மாலையில் பள்ளி முடிந்து மாணவிகளை ஏற்றி கிளம்பியது.

அப்போது, அளவுக்கு அதிகமாக 130 க்கும் மேற்பட்ட மாணவிகளை பேருந்து ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதில், 4 மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்ததால் பரபரப்பானது.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்த புகாரில் நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட முதன்மை கல்வி இயக்குநர் உறுதியளித்திருந்தார்.

இதையடுத்து, பள்ளியின் தாளாளார், தலைமையாசிரியர் மற்றும் பேருந்து ஓட்டுநர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்