அனுமதியின்றி வெட்டப்பட்ட 370 மரங்கள் - 5 பேர் கைது.. 3 மூத்த விஞ்ஞானிகள் பணியிட மாற்றம்

x

உதகையில் மத்திய அரசின் மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையத்தில் அனுமதியின்றி 370 மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தில் 3 மூத்த விஞ்ஞானிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.


நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த தீட்டுக்கல் பகுதியில் உள்ள ஆராய்ச்சி மைய வளாகத்தில் இருந்த 370 மரங்கள் வெட்டி விற்பனை செய்யபட்டது.

இது தொடர்பாக கடந்த இரு வாரங்களுக்கு முன்பு உதகை தெற்கு வனசரகர் நவீன் குமார், வனக்காப்பாளர் பாபு, வனவர் சசி, வேட்டை தடுப்பு காவலர் தேவேந்திரன், ஆராய்ச்சி மைய தற்காலிக பராமரிப்பாளர் நாகராஜ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், ஊட்டி மையத்தின் தலைவராக இருந்த மூத்த விஞ்ஞானி கண்ணன் டேராடூன் தலைமையகத்திற்கும், விஞ்ஞானி மணிவண்ணன் அஸ்ஸாமிற்கும், மற்றொரு விஞ்ஞானி ராஜா ஒடிசாவிற்கும் பணியிட மாற்றம் செய்யபட்டுள்ளனர்.

மண் மற்றும் நீர் வள ஆராய்ச்சி மைய அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பணியிட மாற்றம் மட்டும் செய்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.Next Story

மேலும் செய்திகள்