18 நிமிடத்தில் 36 செய்திகள் | இரவு தந்தி எக்ஸ்பிரஸ்

x

அமெரிக்க அதிபர் பைடனின் அழைப்பை ஏற்று, வரும் 21-ம் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா செல்வதாக வெளியுறவு துறை செயலாளர் வினய் குவாட்ரா தெரிவித்துள்ளார். 21ஆம் தேதி ஐநா சபையின் தலைமையகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தினத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, 22 ஆம் தேதி அதிபர் பைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், பின்னர் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பைடன் சார்பில் அளிக்கப்படும் இரவு விருந்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவியை யாராலும் பறிக்க முடியாது என சபாநாயகர் அப்பாவு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆவடியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதிய கிளையை திறந்து வைத்த பின் பேசிய அவர், செந்தில் பாலாஜியே முன்வந்து விலகினால்தான் வேறு ஒருவரை நியமிக்க முடியும் என்றும் கூறினார். செந்தில் பாலாஜியை கைது கைது செய்ததால் கொங்கு மண்டலமே கிளர்ந்து எழுந்துள்ளதாக அப்பாவு குறிப்பிட்டார்.

மழைநீர் வடிகால் பணிகள் சிறப்பாக செயல்படுத்தியதால் , சென்னையில் மழைநீர் தேங்காத சூழல் ஏற்பட்டுள்ளதாக, அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முதலமைச்சரின் உத்தரவின் பேரில் 5000 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் கட்டமைக்கப்பட்டதால் மழைநீர் தேங்காத சூழல் ஏற்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மின் கசிவினால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கவும்,தடையில்லா மின்சாரம் வழங்க முன்னுரிமை அளிக்க அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில், மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஏற்பட்ட மின் தடையை உடனடியாக சீர் செய்ய அறிவுறுத்தியதாகவும், சென்னையில் இரவு 2 மணி வரை அதிகாரிகள் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்