15 நிமிடத்தில் 35 செய்திகள்.. | மாலை தந்தி எக்ஸ்பிரஸ்

x

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைக் காட்டிலும் 3 டிகிரி செல்சியஸ் அதிகம் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, வரும் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டு போட்டிகளை பண்பாட்டின் ஒரு பகுதியாக அறிவித்து விட்ட பிறகு அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என கருத்து தெரிவித்தது. தமிழக அரசின் சட்டம் அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணாக இல்லை என தெரிவித்த உச்சநீதிமன்றம், கம்பாலா, மகாராஷ்டிராவின் மாட்டு வண்டி பந்தயத்திற்கு தடையில்லை என தீர்ப்பளித்தது.

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். அரசு நடத்திய சட்டப் போராட்டத்துக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது எனவும், வரும் ஜனவரியில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் வெற்றி விழா கொண்டாடப்படும் என்றும் குறிப்பிட்டார்.

கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பெங்களூருவில் வரும் 20ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. 30க்கு 30 என்ற அடிப்படையில், சித்தராமையா அடுத்த 30 மாதங்களுக்கு முதல்வராகவும், அதன் பின்னர் டி.கே. சிவக்குமாருக்கு தனது பதிவை விட்டுக் கொடுக்க உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பெங்களூரில் நடைபெறவுள்ள கர்நாடக மாநில முதலமைச்சர் பதவியேற்பு விழாவிற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் 20ஆம் தேதி கர்நாடக அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறும் என கூறப்படும் நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சித்தராமையா உள்ளிட்டோர் முதலமைச்சர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு அழைப்புவிடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்