31 முக்கிய அரசியல் கட்சிகள்... ரூ. 16,437 கோடி நன்கொடை - வெளியான ஷாக் ரிப்போர்ட்

x

கடந்த 6 ஆண்டுகளில் 31 முக்கிய அரசியல் கட்சிகள் மொத்தம் 16,437 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளன. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.

ஏ.டி.ஆர் என்ற ஆய்வு நிறுவனம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் பற்றிய ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

2016 முதல் 2022 வரையில், 31 கட்சிகளுக்கு 20,000 ரூபாய்க்கும் அதிக தொகைகளை நன்கொடையாக அளித்துவர்கள் பற்றிய விவரங்களை ஏ.டி.ஆர் ஆய்வு செய்து, இந்த அறிக்கையை உருவாக்கியுள்ளது.

2018ல், தேர்தல் பத்திரங்கள் மூலம், கொடையாளர்கள் பற்றிய விவரங்களை வெளியிடாமல், கட்சிகளுக்கு நிதி அளிக்கும் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

2016 முதல் 2022 வரையிலான ஆறு ஆண்டுகளில், 31 அங்கீகாரம் பெற்ற கட்சிகளுக்கு மொத்தம் 16,437 கோடி ரூபாய் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது.

மொத்த நன்கொடைகளில், தேர்தல் பத்திரங்கள் மூலம் 55.9 சதவீதமும், கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து 28.07 சதவீதமும், இதர பிரிவினரிடம் இருந்து 16.03 சதவீத நன்கொடைகளும் பெறப்பட்டுள்ளன.

மொத்த நன்கொடைகளில், 7 தேசிய கட்சிகளின் பங்கு 80.25 சதவீதமாகவும், 24 மாநில கட்சிகளின் பங்கு 19.75 சதவீத மாகவும் உள்ளது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் தேசிய கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடை அளவு,

2017-18 அளவை விட 2021-22ல் 743 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஆனால் இதே கால கட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து இவை பெற்ற நன்கொடைகளின் அளவு 48 சதவீதம் மட்டும் அதிகரித்துள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளில், 6 இதர தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடைகளின் மொத்த அளவை விட,

பாஜக ஆறு மடங்கு அதிக தொகையை நன்கொடையாக பெற்றுள்ளது.

பாஜகவிற்கு கிடைத்த மொத்த நன்கொடைகளில், தேர்தல் பத்திரங்கள் மூலம் 52 சதவீதத்தை பெற்றுள்ளது.

அதேபோல், காங்கிரஸ் 61.54 சதவீத நன்கொடைகளையும், திரிணமுல் காங்கிரஸ் 93.27 சதவீத நன்கொடைகளையும், திமுக 90.7 சதவீத நன்கொடைகளையும், தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளன.

2018 முதல், கடந்த நான்கு ஆண்டுகளாக சி.பி.ஐ கட்சி, கார்பரேட் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை எதையும் பெறவில்லை.


Next Story

மேலும் செய்திகள்