30 ஆண்டுகால பயணம்... சிரிப்பில் தொடங்கி கண்ணீரில்... பேருந்தை கட்டித்தழுவி விடைபெற்ற ஓட்டுநர்..!

x

ஒரு இடத்தில் பல வருடம் வேலை பார்த்துவிட்டு அங்கிருந்து பிரிந்து செல்லும் போது நிச்சயமாக மனதில் ஒரு பாரம் தோன்றும்..அதிலும் பல வருடம் ஒரே இடத்தில் வேலை பார்த்தவர்கள் ஓய்வு பெறும் நாளில் தங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு மிகப்பெரிய விஷயத்தை இழந்துவிட்டு செல்வது போன்று உணருவார்கள். அப்படியான ஒரு நிகவு தான் இந்த வீடியோ.. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அரசு பேருந்து பணிமனையின் ஓட்டுநராக வேலைப் பார்த்தவர் முத்துப்பாண்டி..

60 வயதானதால் ஓட்டுனர் பணியில் இருந்து ஒய்வு பெற்றுள்ளார்.அதன்படி நேற்றைய தினம் அனுப்பானடியில் இருந்து மகாலட்சுமி காலனி செல்லும் பேருந்தை கடைசியாக ஓட்டி பணியை நிறைவு செய்தார்.அப்போது மாலை பணியை முடித்த முத்துப்பாண்டி பேருந்தின் ஸ்டேரிங்கை முத்தமிட்டும் பின் பேருந்தின் முன்புறம் தொட்டு வணங்கி கட்டித்தழுவி கண்ணீர் விட்டு அழுதார்.

தனது 30 ஆண்டு கால சேவையில் மிகவும் நேசித்தது டிரைவர் தொழில் தான் என்றும் தனது தாய் தந்தையாருக்கு பின் இந்த தொழிலை உயிராக நேசித்தேன் என்றும் இந்த தொழில் முலம் தான் தனக்கு மனைவி குழந்தைகள் கிடைத்தனர் என்பதில் பெருமை கொள்கிறேன் என்று உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.. தனது பணிக்காலத்தில் பயணிகள், பொதுமக்களிடம் நல்ல முறையில் பழகியவர் என முத்துப்பாண்டியை சக ஊழியர்கள் பாராட்டியுள்ளனர்..ஒட்டுனர் முத்துப்பாண்டியின் இந்த வீடியோ தற்போது இளையத்தில் வைரலாகி பாரவையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்