சூப்பர் ஓவரில் 30 ரன்கள்.. அதுவும் 50 ஓவர் மேட்சில்.. நெதர்லாந்தால் சின்னாபின்னாமான வெஸ்ட் இண்டீஸ்

x

பரபரப்பான 50 ஓவர் உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டம், சமனில் முடிந்த நிலையில், சூப்பர் ஓவர் முறையில் வெஸ்ட் இண்டீசை நெதர்லாந்து அணி வீழ்த்தியது.

ஹராரேவில் நடைபெற்ற போட்டியில் குரூப் 'ஏ' பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ், 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 374 ரன்கள் குவித்தது. அடுத்து பேட் செய்த நெதர்லாந்து அணியும், 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 374 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது. இதையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் ஆட்டம் நடைபெற்றது. அதில் முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி, அபாரமாக விளையாடி 30 ரன்கள் குவித்தது. தொடர்ந்து பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 8 ரன்கள் மட்டுமே எடுத்ததால், 22 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்