2 வருடத்தில் Gpay மூலம் 30 லட்சம் மோசடி செய்த ஒரே குடும்பம் - சேலத்தில் அதிரடி கைது.

x

சேலம் இளம்பிள்ளையில் ஆன்லைன் மூலம் சேலைகள் விற்று ரூ.30 லட்சம் மோசடி செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி சுபா. இவர் அதே பகுதியில் ஜவுளி நிறுவனம் நடத்தி வரும் நிலையில், ஆன்லைன் மூலமும் சேலைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பிரிவில் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த உமா மகேஸ்வரி, கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை ஆன்லைன் மூலம் சேலைகள் விற்ற பணம் ரூ.30 லட்சத்தை தமது வங்கி கணக்கு மற்றும் சகோதரர் மாணிக்கம் வங்கி கணக்கிற்கு கூகுள்பே மூலம் பெற்று மோசடி செய்துள்ளார். இதற்கு உமா மகேஸ்வரியின் தந்தை ஆறுமுகம் உடந்தையாக இருந்துள்ளார். இது குறித்து ஜவுளி நிறுவன உரிமையாளர் மனைவி சுபா சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரையடுத்து, விசாரணை நடத்திய மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. இளமுருகன் மற்றும் சந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து, உமாமகேஸ்வரி, மாணிக்கம், ஆறுமுகம் ஆகியோரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்