நெல்லை பல்வீர்சிங் விவகாரத்தை மேலும் சூடுபிடிக்க வைத்த அந்த 3 பேர் - வெளியே வரும் அடுத்தடுத்து அதிர்ச்சி

x
  • அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் பல்வீர்சிங். பல்லால் பல சர்ச்சைகளுக்கு ஆளான இவர் மீது, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தன.
  • ஏஎஸ்பியாக பணியாற்றிய பல்வீர்சிங், விசாரணைக்காக வந்த நபர்களின் பற்களை பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த விவகாரம், சட்டசபை, மாநில மனித உரிமை ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையம் என ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தது.
  • இந்த விவகாரத்தில் முதற்கட்டமாக, சேரன்மகாதேவி ஆட்சியர் விசாரணை மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை முடிவடைந்தது.
  • அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு மூத்த ஐஏஎஸ் அதிகாரியான அமுதா, சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு அவரது விசாரணையும் நடைபெற்று வருகிறது.
  • ஆனால், நெல்லையில் 2 நாட்களாக முகாமிட்டு, மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா விசாரணையை துவங்கிய நிலையில், அவரது விசாரணையை பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு புறக்கணித்ததால், யாரும் ஆஜராகவில்லை.
  • பின்னர், ஐஏஎஸ் அதிகாரி அமுதா சென்னைக்கு கிளம்பி வந்த நிலையில், தேசிய மனித உரிமை ஆணையத்தில் மேலும் 3 புகார்கள் பதிவாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • அதாவது, விக்ரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் காவல் நிலையங்களில் மட்டும் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது, புதிதாக பாப்பாக்குடி காவல் நிலையத்தில், 3 இளைஞர்கள் தாங்கள் அனுபவித்த இன்னல்களை, குற்றச்சாட்டாக பதிவு செய்திருப்பதன் மூலம், இந்த சம்பவம் மேலும் சூடு பிடித்துள்ளது.
  • வழக்கு விசாரணைக்காக பாப்பாக்குடி காவல்நிலையம் சென்ற இசக்கி பாண்டியனை, ஏஎஸ்பி பல்வீர் சிங், கல்லை வைத்து பற்களை தாக்கியதாகவும், வாயில் இருந்து ரத்தம் வந்த பின்னர் மிளகாய் பொடியை தனது வாயில் போட்டதாகவும் கூறியிருப்பது அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
  • தன்னைப் போன்று, பாப்பாக்குடி மற்றும் பள்ளத்தால் புதுக்குடி பகுதியை சேர்ந்த இளைஞர்களும் மிகுந்த தாக்குதலுக்கு உள்ளானதாகவும் அவர் தெரிவித்திருப்பது, சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங் மீதான புகார்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
  • இதுவரை பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்டோர் தாங்கள் அனுபவித்த இன்னல்களை கூறியிருக்கும் நிலையில், உரிய பாதுகாப்பு கொடுக்கப்பட்டால், நூற்றுக்கும் மேற்பட்டோர் தைரியமாக வெளியே வந்து புகார் அளிக்க வாய்ப்புள்ளதாக பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞரான மகாராஜன் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்