"நாங்கள் சிறைக்கு செல்ல நீ தான் காரணம்" - காங்கிரஸ் பிரமுகரை சரமாரியாக கத்தியால் தாக்கிய நபர்கள்

x

சென்னையில் மாமூல் கேட்டு பொதுமக்களை தாக்கிய நபர்களின் வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டு போலீசிடம் சிக்க வைத்த ஆத்திரத்தால் காங்கிரஸ் பிரமுகரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை பெரியமேட்டை சேர்ந்தவர் அப்ரோஸ் அகமது. இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஆர்டிஐ பிரிவில் மாநில செயலாளராக உள்ளார். இவர் அண்மையில் சில நபர்கள் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை மாமூல் கேட்டு தாக்குதல் நடத்தும் சிசிடிவியை சமூகவலைதளங்களில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. அந்த வீடியோ வைரலான நிலையில் போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து ஜாமினில் வந்த அந்த நபர்கள், அப்ரோஸ் கடைக்குள் புகுந்து, தாங்கள் சிறைக்கு செல்ல நீ தான் காரணம் என கூறி அவரை சரமாரியாக கத்தியால் தாக்கி தப்பி சென்றுள்ளனர். இந்நிலையில், அப்ரோஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் மூவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்