3 பேர் 3 நாள்... கடும் உழைப்பின் பலன் - "பிரமாண்ட பிபா உலகக்கோப்பை கேக்" - பிரமித்து பார்த்த மக்கள்

x

ராமநாதபுரத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக, கால்பந்து உலகக்கோப்பை வடிவில் பிரம்மாண்ட கேக் தயாரிக்கப்பட்டுள்ளது.

சுமார் 85 கிலோ எடையில் உருவாக்கப்பட்ட இந்த கேக்கை, ஆச்சரியத்துடன் கண்டுரசிக்கும் பொதுமக்கள் அதனை செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். இந்த உலகக்கோப்பை கேக்கை தயாரிக்க 3 நாட்கள் ஆனதாகவும், 260 முட்டை மற்றும் 60 கிலோ சர்க்கரை கொண்டு பிரம்மாண்ட கேக் தயாரிக்கப்பட்டதாகவும் பேக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்