300 அடி ஆழ்துளையில் 3 நாட்கள்.. சாவை வென்று வெளியே வந்த சிறுமி - 1 நொடியில் தலைகீழாய் மாற்றிய 'எமன்'

x

மத்தியப் பிரதேசத்தில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தை மீட்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் உயிரிழந்தது.

மத்தியப் பிரதேசத்தின் செஹோர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணி அளவில் முங்காவலி கிராமத்தில் வயலில் 300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் இரண்டரை வயது சிறுமி விழுந்தார். முதலில் 20 அடி ஆழத்தில் விழுந்த அந்த குழந்தை மெல்ல மெல்ல நழுவி 50 ஆழம் பிறகு 100 அடி ஆழம் வரை சென்றதாக கூறப்பட்டிருந்தது.இந்நிலையில், 3 வது நாளாக தொடர்ந்த மீட்பு பணியில், சிறுமி மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட குழந்தை மயக்க நிலையில் இருப்பதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல், உயிரிழந்தார். இதனிடையே சிறுமியின் உ​யிரிழப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்