கழிவுநீர் தொட்டியினுள் தாக்கிய விஷவாயு...கட்டிட தொழிலாளிகள் 3 பேர் உயிரிழந்த சோகம்

x

கரூரில் கழிவுநீர் தொட்டியில் சென்ட்ரிங் பிரிக்க இறங்கிய இரு கட்டிட தொழிலாளர்களும், அவர்களை காப்பாற்ற சென்ற மற்றொரு தொழிலாளியும் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர்.

சுக்காலியூரில் குணசேகரன் என்பவர் கட்டப்பட்டு வரும் புதிய வீட்டில் கழிவுநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் கழிவுநீர் தொட்டியில் போட்டப்பட்டிருந்த கான்கிரீட் பலகைகளை அகற்றும் பணியில் கட்டிட தொழிலாளர்கள் மோகன்ரான் மற்றும் ராஜேஷ் ஆகியோர் ஈடுபட்டனர். இருவரும் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி பலகைகளை அகற்றி கொண்டிருந்த போது விஷவாயு தாக்கியுள்ளது. இருவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த சிவக்குமார் என்பவர், அவர்களை காப்பாற்ற கழிவுநீர் தொட்டியினுள் இறங்கினார். அப்போது விஷ வாயு தாக்கி மூன்று தொழிலாளர்களும் உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் 3 உடல்களையும் மீட்டு கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் கட்டிட உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டார். அதில், புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் தொட்டியில் முழங்கால் அளவுக்கு தேங்கிய தண்ணீரில் சவுக்கு குச்சிகள் மூழ்கியதால், விஷ வாயு உருவாகி இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இதற்கிடையே, விஷ வாயு தாக்கிய இடத்தில் கட்டுமான பணி முறையாக நடைபெற்றதா என்பது குறித்து ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்