வாத்து என நினைத்து அன்னப் பறவையை கொன்று தின்ற 3 சிறுவர்கள் அதிரடி கைது

x

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள கிராமத்தில் அன்னப் பறவையைக் கொன்று தின்ற குற்றத்திற்காக 3 பதின்ம வயதினர் கைது செய்யப்பட்டுள்ளனர். Manlius எனும் கிராம மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட பெண் அன்னப் பறவையும், அதன் 4 குஞ்சுகளும் மாயமாகின. அதன் குஞ்சுகள் கண்டறியப்பட்ட நிலையில், பெண் அன்னப் பறவை கொலை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. Faye என்ற அந்த அன்னத்தை, வாத்து என நினைத்துப் பிடித்துச் சென்ற 3 பதின்ம வயதினர் அதை உறவினர் வீட்டில் வைத்து கொன்று சமைத்து தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட 3 பதின்ம வயதினரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்