சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தீவிரம்..ரூ.61,800 கோடி நிதி ஒதுக்கீடு

x

சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் இரண்டு வழித்தடங்களில் செயல்பாட்டில் உள்ளன. இந்நிலையில், 2-ம் கட்ட பணிகளுக்காக 61 ஆயிரத்து 800 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சுமார் 116.1 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ அமையவுள்ளது. இதில் 43 கிலோ மீட்டர் அளவுக்கு சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு, 48 ரயில் நிலையங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 3-வது வழித்தடம், மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், 4-வது வழித்தடம், கலங்கரை விளக்கம் முதல் முதல் பூந்தமல்லி பணிமனை வரையிலும் அமையவுள்ளது.

5-வது வழித்தடத்தில், மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரை ரயில் இயக்கப்பட உள்ளது. 2ம் கட்டத்தில் 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. உயர்மட்ட பாலப் பணிகள் 2024 ஆண்டுக்குள் நிறைவுபெற்று, 2025ம் ஆண்டு முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், சுரங்கப்பணிகளை 2028ம் ஆண்டுக்குள் நிறைவு செய்து, பயன்பாட்டில் கொண்டு வரவும் மெட்ரோ ரயில்வே திட்டமிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்