256 மணி நேரம்.. 12,200 கிமீ தூரம்.. சிங்கிள் காரை வைத்தே கின்னஸ் சாதனை படைத்த கோவை தொழிலதிபர்

x

கோவையை சேர்ந்த விஷ்ணுராம் என்பவர், 256 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 200 கிலோமீட்டர் தூரத்தை காரில் பயணித்து கின்னஸ் சாதனை படைத்தார்.

கோவையை சேர்ந்த தொழிலதிபரும், விளையாட்டு வீரருமான விஷ்ணுராம் என்பவர், பெண் குழந்தைகளின் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், இந்தியாவின் 4 மூலைகளுக்கும் பயணம் செய்து கின்னஸ் சாதனை படைக்க திட்டமிட்டார். அதன்படி சென்னையில் இருந்து கன்னியாகுமரி - தேசு - லே - கோடேஷ்வர் ஆகிய 4 பகுதிகளுக்கு காரில் பயணம் செய்தார். இறுதியாக 256 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 200 கிலோமீட்டர் தூரத்தை காரில் பயணித்த அவர், முந்தைய கின்னஸ் உலக சாதனையான 401 மணி நேரத்தை முறியடித்தார். இதன்மூலம் கிடைத்த நிதியை கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் ஒப்படைக்க உள்ளதாக விஷ்ணுராம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்