25 லட்சம் வீடு வெறும் 6 லட்ச ருபாய்.. வயதான தம்பதியரிடம் கைவரிசை காட்டிய ஆருத்ரா நிதி நிறுவன முகவர்

x

ஜெம் நகரில் வசித்து வரும் வயதான ஸ்டீபன், சுகுணா தேவி தம்பதிக்கு, சொந்தமாக 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் மனை இருந்துள்ளது. இந்நிலையில் ஆருத்ரா நிதி நிறுவனத்தின் முகவராக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் அவர்களது வீட்டை 26 லட்ச ரூபாய்க்கு விலை பேசி, ஆறு லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து, பத்திரப்பதிவு செய்து கொண்டுள்ளார். மீதமுள்ள 20 லட்ச ரூபாய் பணத்தை ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து வட்டியை பெற்றுக் கொள்ளுமாறு ஏற்பாடு செய்துள்ளார். இந்த விவகாரத்தில் நாகராஜ் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் வந்துள்ளார். ஆத்திரமடைந்த நாகராஜ் தனது அடியாட்களுடன் சென்று, முதியவர்கள் தங்கி இருந்த, வீட்டிலிருந்து அனைத்து பொருட்களையும் வெளியே எடுத்து வீசி பூட்டியுள்ளார். இதையடுத்து முகவர் நாகராஜை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்