ரூ.2.5 கோடி மதிப்பில் வடிவமைக்கப்பட்ட தங்க நகை - தேசிய விருது பெற்ற தமிழக ஜுவல்லரி

x

ரூ.2.5 கோடி மதிப்பில் வடிவமைக்கப்பட்ட தங்க நகை -

தேசிய விருது பெற்ற தமிழக ஜுவல்லரி

சிறந்த தங்க நகை வடிவமைப்புக்காக போத்தீஸ் நிறுவனத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது. ஜெம்ஸ் ஆண்ட் ஜுவல்லரி என்ற அமைப்பினர் ஆண்டு தோறும் நகை வடிவமைப்பு கண்காட்சி மற்றும் விளம்பர கண்காட்சி நடத்தி வருகின்றனர். இந்த கண்காட்சியில் போத்தீஸ் ஸ்வர்ணமஹால் சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுர வடிவிலான நகை வடிவமைப்பு காட்சி படுத்தப்பட்டது. இந்த வடிவமைப்பு தேசிய அளவிலான சிறந்த வடிவமைப்பான முதல் பரிசினை வென்றுள்ளது. இரண்டரை கோடி ரூபாய் மதிப்பில் தயார் செய்யப்பட்ட இந்த வடிவமைப்பு குரோம்பேட்டை போத்தீஸ் சுவர்ணமஹாலில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்