கர்நாடகாவில் 24 பேர் அமைச்சர்களாக இன்று பதவியேற்பு

x

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து, முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டிகே சிவக்குமாரும் கடந்த 20ம் தேதி பதவியேற்றனர். அப்போது 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்நிலையில், கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தினேஷ் குண்டுராவ், மகாதேவப்பா, ஹெச்.கே.பாட்டீல் உள்பட 24 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். ஆளுநர் மாளிகையில் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெறும் விழாவில், அவர்களுக்கு கர்நாடக ஆளுநர், பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்க உள்ளார்


Next Story

மேலும் செய்திகள்