"வேலூர் மாவட்டத்தில் 23 இடங்கள் பாதிக்கப்பட கூடியவை" - வேலூர் ஆட்சியர் அறிக்கை

x

"வேலூர் மாவட்டத்தில் 23 இடங்கள் பாதிக்கப்பட கூடியவை" - வேலூர் ஆட்சியர் அறிக்கை

வடகிழக்கு பருவ மழை பாதிப்புகளை தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் 23 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட கூடியவையாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், 26 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மழை, வெள்ளம் தொடர்பாக தனி நபர்கள் தெரிவிக்கும் செய்திகளை பொது மக்கள் கருத்தில் கொள்ளக்கூடாது என அறிவுறுத்திய ஆட்சியர், அரசின் மூலம் வெளியிடப்படும் செய்திகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என, தெரிவித்தார். மேலும், குளம், குட்டை, ஏரி ஆகிய நீர்த் தேக்கங்களில் குழந்தைகளை விளையாடவோ, செல்ஃபி எடுக்கவோ பெற்றோர் அனுமதிக்கக் கூடாது என, ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்