மக்களே உஷார்! | சீட்டு போடுபவர்களை ஏமாற்றும் தனியார் நிதி நிறுவனம் | CHIT FUND

x

வந்தவாசி, செய்யாறு பகுதிகளில் 22 கோடி ரூபாய் மோசடி செய்தததாக தனியார் நிதி நிறுவனத்தின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 250-க்கும் மேற்பட்டோர், தனியார் நிதி நிறுவனம் மோசடி செய்து ஏமாற்றியதாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். அதில் வந்தவாசி, செய்யாறு பகுதிகளில் நிதி நிறுவனம் நடத்தி வந்த சம்சு மொய்தீன் என்பவர், சீட்டு நடத்தில் பல ஆயிரம் பேரிடம் பணம் வசூல் செய்ததாக தெரிவித்துள்ளனர். ஆனால் உறுதியளித்தபடி பரிசுப்பொருட்கள் தராமல் காலம் தாழ்த்தியதாக தெரிவித்துள்ள அவர்கள், சுமார் 22 கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து வந்தவாசியில் உள்ள சம்சு மொய்தீனின் சகோதரி நிஷா வீட்டிற்கு சென்ற போலீசார், அவரும் தலைமறைவான நிலையில், வீட்டில் சோதனை செய்து சீல் வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்