"கோடை காலத்தில் 217 சிறப்பு ரயில்கள்" - இந்திய ரயில்வே அறிவிப்பு

x

கோடை காலத்தில் ரயில் பயணிகளின் வசதிக்காகவும், பயணிகளின் கூடுதல் நெரிசலை சமாளிக்கவும், 217 சிறப்பு ரயில்கள் மூலம் கூடுதலாக இந்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

ரயில்வே வழித்தடங்களில் நாடு முழுவதும் உள்ள முக்கியமான இடங்களை இணைத்து சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தென்மேற்கு ரயில்வேயில் அதிக பட்சமாக 69 சிறப்பு ரயில்களும், தென் மத்திய ரயில்வேயில் 48 சிறப்பு ரயில்களும், தெற்கு ரயில்வேயில் 20 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன. இருக்கைகளை முடக்கி வைத்தல், அதிக கட்டணம் வசூலித்தல், இடைத்தரகர் நடவடிக்கை போன்ற முறைகேடுகள் கடுமையாக கண்காணிக்கப்படும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்