2024 தேர்தல்.. திமுக, காங்கிரஸ் கூட்டணியில் ஆம் ஆத்மியா? - CM ஸ்டாலின் சொன்ன சேதி

x

2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உடன் பேசியதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலுக்காக மட்டுமல்ல ஜனநாயகத்தை காக்க எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைவது அவசியமாக உள்ளது என குறிப்பிட்டார். இந்த ஒருங்கிணைப்பு தொடர வேண்டும் என்பதே தமது ஆசை என்றும் தெரிவித்தார். பாட்னாவில் நடக்க உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தின் தேதி மாற்றப்பட வாய்ப்பு உள்ளது என்றும் முதலமைச்சர் கூறினார். ராகுல் காந்தி வெளிநாட்டில் இருப்பதால் கூட்டத்தில் பங்கேற்க முடியாத சூழல் உள்ளதாக தெரிவித்தார். ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையை திறந்து வைக்க செல்ல உள்ளதால், தேதியை மாற்றி வைக்க கேட்டிருப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்