2021ல் நடந்த மோதல் எதிரொலி... அம்பேத்கர் படத்திற்கு மரியாதை செய்ய 50 பேருக்கு மட்டுமே அனுமதி - ஆட்சியர் அதிரடி உத்தரவு

x

மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தியில் கடந்த 2021ஆம் ஆண்டு, அம்பேத்கரின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்துவது தொடர்பாக இருதரப்பினர் இடையே கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்தாண்டு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போதைய சூழல் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் அம்பேத்கர் படத்துக்கு மரியாதை செலுத்த, அரசு தரப்பில் 10 பேர் மற்றும் கிராம மக்களின் இரு தரப்பிலும் தலா 20 பேர் என மொத்தம் 50 பேரை மட்டுமே அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்