2010 டி20 - அரையிறுதியில் பாக்-ஐ வீழ்த்திய ஆஸி... மறக்க முடியாத தருணங்கள்

x

டி20 உலகக் கோப்பை திருவிழாவிற்கு இன்னும் -- நாட்களே எஞ்சி இருக்கின்றன. இந்தத் தருணத்தில் 2010ம் ஆண்டு அரையிறுதியில் மைக் ஹசி ஆடிய அட்டகாசமான சம்பவத்தை நினைவுபடுத்துகிறது இந்தத் தொகுப்பு...

2009ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான், பட்டத்தை தக்கவைக்கும் முனைப்பில் 2010ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் பங்கேற்றது.

குரூப் சுற்றில் அடுத்தடுத்து தோல்வி கண்ட பாகிஸ்தான், அதிர்ஷ்டத்தின் உதவியால் அரையிறுதிக்கும் முன்னேற, மறுபுறம் ஒரு தோல்விகூட காணாமல் அரையிறுதிக்கு வந்தது வலிமையான ஆஸ்திரேலியா...

பார்படாஸில் அரையிறுதி ஆட்டம்.... முதலில் ஆடிய பாகிஸ்தானில் அக்மல் சகோதரர்கள் அதிரடி அரைசதம் அடித்தனர். 20 ஓவர்களில் 191 ரன்கள் குவித்தது பாகிஸ்தான்...

பின்னர் இமாலய இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சி... வார்னர் டக் அவுட் ஆனார்.

அடுத்து வந்தவர்களும் பெரிதாக பங்களிக்காததால் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்த ஆஸ்திரேலியாவிற்கு ஆபத்பாந்தவனாக களமிறங்கினார் மைக் ஹசி....

கிளாசிக்கல் ஆட்டத்துக்கு பெயர்போன மிஸ்டர் கிரிக்கெட் மைக் ஹசி, அன்றைய தினம் களத்தில் வாண வேடிக்கைக் காட்டினார்.

கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அதற்கு அசராத மைக் ஹசி, சயீத் அஜ்மல் வீசிய கடைசி ஓவரில் 3 சிக்சர்களைப் பறக்கவிட்டு பாகிஸ்தானை மிரள வைத்தார்.

மைக் ஹசியின் அதிரடியால் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா, இங்கிலாந்திடம் கோப்பையை பறிகொடுத்தாலும் அரையிறுதியில் மைக் ஹசி ஆடிய அதிரடி இன்னிங்ஸ் டி20 வரலாற்றில் ஆழமாகப் பதிந்துவிட்டது


Next Story

மேலும் செய்திகள்