2001-இல் கவுன்சிலர்.. இப்போது பூ வியாபாரி... "மாநகராட்சியில் குப்பை அள்ளும் வேலை செய்தேன்" - "நான் பொழைக்கிறதுக்கு சொந்த இடம் கொடுத்தால் போதும்"

x

சென்னை திருவொற்றியூரில் அதிமுக கவுன்சிலராக இருந்த பாஞ்சாலி, எல்லையம்மன் கோவில் வாசலில் பூ விற்று வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

கடந்த 2001-ஆம் ஆண்டில் கவுன்சிலரான இவர், வாக்களித்த மக்களுக்கு உண்மையாக உழைத்ததாகவும், பதவி அதிகாரத்தை வைத்துக் கொண்டு எதையும் சம்பாதிக்கவில்லை என்றும் கூறினார்.

ஒரு கட்டத்தில் தான் கவுன்சிலராக இருந்த பகுதியிலேயே ஒப்பந்த தூய்மைப் பணியாரளாகவும் பணியாற்றியதாக கூறுகிறார்.

தாம் வசித்து வந்த வீட்டை குடியிருப்பு கட்டுவதற்கு அரசு கையப்படுத்தி விட்டதால், வாடகை வீட்டில், பேரனின் தயவில் வாழ்ந்து வருவதாக பாஞ்சாலி கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்