20,000 ஊழியர்கள் நீக்கம் - அதிர்ச்சி கொடுத்த அமேசான்

x

உலகின் மிகப் பெரிய ஆன்லைன் விற்பனை நிறுவனமாக அமேசான் நிறுவனம், உலகெங்கும் சுமார் 20 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

உலகெங்கும் தற்போது 15.44 லட்சம் ஊழியர்களை கொண்ட அமேசான் நிறுவனத்தில் இருந்து சுமார் 20 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யபட உள்ளதக தகவல்கள்கூறுகின்றன.

கொரோனா ஊரடங்குகளின் போது, கடைகள், அலுவலகங்கள் மூடப்பட்டதால், ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கும் போக்கு வெகுவாக அதிகரித்தது.

இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் அமேசான் நிறுவனம் ஏராளமான புதிய ஊழியர்களை பணியில் அமர்த்தியது. தற்போது இயல்பு நிலை திரும்பி விட்டதால், செலவுகளை குறைக்க, ஆட்குறைப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

கார்ப்பரேட் அலுவலக ஊழியர்களில் 6 சதவீதத்தினரையும், இதர பிரிவினரில் 1.6 சதவீதத்தினரையும் பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

டிவிட்டர், மெடா, கூகுள் உள்ளிட்ட இதர ஆன்லைன் நிறுவனங்களிலும் ஆட்குறைப்பு செய்யப்படுவது ஒப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்