மலையேற சென்ற 20 பேர்... திடீரென 4 பேர் மாயமானதால் அதிர்ச்சி

x

இமாச்சல பிரதேசத்தில் மலையேற சென்ற 4 பேர் மாயமானதால், 5 வது நாளாக தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

குல்லு மாவட்டத்தில் உள்ள அலி ரத்னி திப்பா மலையில் 20 பேர் கொண்ட குழு மலையேறியுள்ளனர்.

அவர்கள் குறிப்பிட்ட தூரம் சென்ற நிலையில் 4 பேரை காணவில்லை என கூறப்படுகிறது.

பின்னர் தரைப்பகுதிக்கு வந்த எஞ்சியவர்கள் காணாமல் போனவர்கள் குறித்து புகார் அளித்தனர்.

இந்த நிலையில் 5வது நாளாக மாயமானவர்களை தேடும் பணியில் 15 பேர் கொண்ட மீட்பு குழுவும், 2 விமானப்படை விமானங்களும் ஈடுபட்டு வருகின்றன.

எனினும், மாயமானவர்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.


Next Story

மேலும் செய்திகள்