20 வங்கிகள்.. ரூ. 4,037.87 கோடி.. பணத்தை சுருட்டிய தனியார் நிறுவனம் | Bank Fraud | Kolkata

x

கொல்கத்தாவை தலைமையகமாக கொண்டு செயல்படும் தனியார் நிறுவனம் 4 ஆயிரத்து 37 கோடி ரூபாய் அளவிற்கு வங்கி மோசடியை அரங்கேற்றியிருப்பதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்ததுள்ளது.

யூனியன் வங்கி கொடுத்த புகாரில் விசாரணையை மேற்கொண்ட சிபிஐ, கார்ப்பரேட் பவர் நிறுவனம் 4 ஆயிரத்து 37 கோடி ரூபாய் அளவிற்கு வங்கி மோசடியை அரங்கேற்றியிருப்பதாக வழக்குப்பதிவு செய்ததுள்ளது. அந்நிறுவனத்தின் இயக்குநர்கள், அதிகாரிகளுக்கு எதிராகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நிறுவனம் 20 வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. மும்பை, கொல்கத்தா, விசாகப்பட்டினம் உள்பட 16 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது. 2009 மற்றும் 2013 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் நிறுவனம் முறைகேடான கணக்குகளை சமர்பித்து மோசடி செய்துள்ளதாகவும், போலி கணக்குகளை தொடங்கி நிதியை பல்வேறு நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்