யூடியூப் நேரலையில் இருந்த கொரிய பெண்ணிடம் சில்மிஷம்... 2 இளைஞர்கள் கைது

x

கொரியாவைச் சேர்ந்த அந்த பெண், மும்பையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, சாலையில் நடந்தபடி யூடியூப் நேரலையில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, இரு சக்கர வாகனத்தில் நண்பருடன் வந்த ஒரு இளைஞர், அந்த பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து, வண்டியில் அமரச் சொல்லி வற்புறுத்தினார்.

அவரின் கையை உதறி விட்டு அந்தப் பெண் அங்கிருந்து தப்பினார்.

இது தொடர்பான வீடியோ, சமூக ஊடகத்தில் பரவியதை அடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவத்தில் தொடர்புடைய இருவரையும் கைது செய்தனர்.

சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், அந்த இளைஞர், பெண்ணின் கையைப் பிடித்து வம்பிழுக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்