2 ஆண்டுகள் சிறைத்தண்டனை: உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு

x

அவதூறு வழக்கில் குற்றவாளி என சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரி, உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ளார்.

அவதூறு வழக்கில் குற்றவாளி என சூரத் நீதிமன்றம் கூறிய தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரி, குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் பிரச்சக், வீர் சவார்க்கரின் பேரன் சார்பில் 8ஆவது அவதூறு வழக்கு பதிவு செய்த பின்னும், அவதூறு செய்வதை நிறுத்திக் கொள்ளவில்லை என்றார். இதுபோன்ற சூழலில் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு ராகுல் காந்திக்கு எவ்விதத்திலும் அநீதியை இழக்கவில்லை என்றும், அது சட்டரீதியாக சரி தான் என்றும் கூறி, மனுவை தள்ளுபடி செய்திருந்தார். இந்நிலையில், சூரத் நீதிமன்றத் தீர்ப்பை நிறுத்தி வைக்க‌க் கோரி, உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனுதாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே புகார்தார‌ர் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்