2 ஆண்டு சிறை தண்டனை.. தப்புவாரா ராகுல் காந்தி..? இன்று தெரியவரும்

அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடைகோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த வழக்கில், குஜராத் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், தீர்ப்பை ரத்து செய்யக் கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனுத்தாக்கல் செய்தார். இதுதொடர்பாக கடந்த மே மாதம் இரண்டாம் தேதி, குஜராத் உயர்நீதிமன்றம் இருதரப்பு வாதங்களையும் கேட்டபின்பு தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில் ராகுல் காந்தி தாக்கல் செய்த மனு மீது, குஜராத் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

X

Thanthi TV
www.thanthitv.com