ஹிஜாப் அணியாத நடிகைக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

x

ஹிஜாப் அணியாத ஈரானிய நடிகைக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அந்நாட்டில் பொது இடங்களில் ஹிஜாப் அணிவது அவசியம். அதை மீறிய 61 வயது ஈரானிய நடிகை Afsaneh Bayegan, திரைப்பட விழாவில் ஹிஜாப் இன்றி பங்கேற்றார். இதையடுத்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இதுபோன்ற நடவடிக்கையால், மனநல சிகிச்சைக்காக Afsaneh வாராவாரம் உளவியல் ஆலோசனை பெற்று அதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கும், நாட்டை விட்டு வெளியேறவும் 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்