"நான் ரெடி தான்..?" - ஒரே மூவில் 2 டார்கெட்..! விஜய்யின் அரசியல் வியூகம் என்ன..?

x

முதல் தலைமுறை வாக்காளர்களை கவரும் வகையில் மாணவர்களை ஈர்க்கும் விஜய்யின் xzகுறித்து இந்த தொகுப்பில் காணலாம்...

விஜய் மக்கள் இயக்கம் வாயிலாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வரும் விஜய், சமீபகாலமாக நிர்வாகிகளை சந்திப்பது, அதுவும் 234 தொகுதி வாரியாக கவனம் செலுத்துவது எல்லாம் அவர் அரசியல் பாதையை தொடங்கிவிட்டார் என்பதை காட்டுகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்...

இதில் சமீபத்தில் 234 தொகுதிகளை சேர்ந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை அவர் சந்தித்து கல்வி உதவி வழங்கியது தனிக்கவனம் பெற்றது. அந்த சந்திப்பில் கலந்துக் கொண்ட பெற்றோரும், மாணவர்களுமே விஜய் அரசியலுக்கு வர அழைப்பு விடுத்தது ஹைலைட்...

அப்போதே பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து பேசிய விஜய், காமராஜர்... அம்பேத்கர்... பெரியார் பற்றி படிக்க வேண்டும் எனக் கூறியதும் கவனம் ஈர்த்தது. அப்போதே நாளைய வாக்காளர்களை விஜய் குறி வைக்கிறார் என்ற பேச்சும் எழுந்தது.

இப்போது பள்ளி மாணவர்களாக இருக்கும் பலரும் 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வாக்காளார் ஆவர்... விஜய் 2026 தேர்தலை குறிவைப்பதாக கூறப்படும் சூழலில் கூட்டி கழித்து பார்த்தால் அவரது மொத்த டார்க்கெட்டும் இளம் வாக்காளர்களே என்பது அரசியல் வட்டார பேச்சு...

இந்த வரிசையில் மற்றொரு அதிரடிக்கு தயாராகியிருக்கிறது விஜய் மக்கள் இயக்கம்.. இதுவும் இளைஞர்களை நோக்கியதாகவே இருக்கிறது...

ஏழை எளிய பள்ளி மாணவர்களுக்கு இரவுநேர இலவச பாடசாலை திட்டம், பட்டதாரி இளைஞர்களுக்கு இலவச டியூஷன் மூலம் வேலைவாய்ப்பை கிடைக்க செய்யும் திட்டத்தை விஜய் மக்கள் இயக்கம் அறிமுகப்படுத்த இருக்கிறது.

முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்த நாளான வரும் 15 ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினமே இந்த திட்டத்தை விஜய் மக்கள் இயக்கம் செயல்படுத்த இருக்கிறது.

ஒரு சட்டப்பேரவை தொகுதியில் 4 இடங்களை தேர்வு செய்து, ஆசிரியர்களை நியமனம் செய்து மாலை மாலை நேர இலவச கல்வி வகுப்புகள் வழங்க மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

டியூஷன் செயல்படும் இடத்திற்கான வாடகை, ஆசிரியர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட செலவுகளை விஜய் மக்கள் இயக்கமே வழங்கும் என வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் பணிக்கு வேலை வாய்ப்பின்றி ஏழ்மையில் தவிக்கும் பட்டதாரி இளைஞர்களை தேர்வு செய்யும் பணிகளும் துவங்கியுள்ளன.

மாணவர்கள் கல்வியில் அக்கறை காட்டும் விஜய் ஒட்டுமொத்தமாக முதல் தலைமுறை வாக்காளர்களை மையபடுத்தி பல்வேறு திட்டங்களை தொடங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்