விளக்கு ஒளியில் படிக்கும் +2 மாணவி... உடனே கலெக்டர் எடுத்த ஆக்‌ஷன்

x
  • தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மண்ணெண்ணெய் விளக்கில் படித்து வந்த மாணவியின் வீட்டிற்கு, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த லெட்சுமி என்பவரது வீடு, மின் இணைப்பு இன்றி இருந்து வந்தது.
  • இதனால் அவரது மகளான 12 ஆம் வகுப்பு மாணவி பேச்சுதாய், பத்தாண்டுக்கு மேலாக மண்ணெண்ணெய் விளக்கில் படித்து வந்துள்ளார்.
  • இதுபற்றி வழக்கறிஞர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட, அதனைக்கண்ட தூத்துக்குடி ஆட்சியர், மாணவியின் வீட்டிற்கு உடனடியாக மின்சாரம் வழங்க ஆணையிட்டார்.
  • அதனடிப்படையில் வட்டாட்சியர் தலைமையில் மாணவியின் வீட்டிற்கு சென்ற மின் வாரிய ஊழியர்கள், வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கினர்.

Next Story

மேலும் செய்திகள்