4 குழந்தைகளுடன் தமிழகம் வந்த 2 இலங்கை தமிழர் குடும்பம்.. தனுஷ்கோடி முகாமில் தஞ்சம்

x

4 குழந்தைகளுடன் தமிழகம் வந்த 2 இலங்கை தமிழர் குடும்பம்.. தனுஷ்கோடி முகாமில் தஞ்சம்


இலங்கை கிளிநொச்சியைச் சேர்ந்த சந்திரகுமார், யாழ்ப்பாணத்தை சேர்ந்த கிருபாகரன் ஆகிய இருவரது குடும்பத்தினர் தமிழகம் வந்துள்ளனர். தலைமன்னாரில் இருந்து பைபர் படகு மூலம் தனுஷ்கோடி வந்த எட்டு இலங்கை தமிழர்கள், ஆட்டோவில் ஏறி மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு சென்றனர். அங்கு மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் 8 பேரிடம் விசாரணை நடத்தினர். இதைதொடர்ந்து, 4 குழந்தைகள் உட்பட 8 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர். இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்களின் எண்ணிக்கை 149ஆக உயர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்