சப்த நாடிகளையும் அடக்கிய 2 சிக்சர்கள் இதயத்தை நொறுக்கிய கடைசி பந்து போர்கொண்ட சிங்கமாய் நின்ற தோனி..!

x

ஐபிஎல் போட்டியில், சென்னையை 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியது.

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 17வது லீக் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது.

சிறப்பாக விளையாடிய ஜாஸ் பட்லர், 52 ரன்களில் ஆட்டமிழந்தார். படிக்கல் 38 ரன்கள் எடுத்தார்.

176 ரன்கள் இலக்கை நோக்கி ஆட துவங்கிய சென்னைஅணியில் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ரஹானே 31 ரன்களில் அவுட் ஆக, அடுத்து வந்த ஷிவம் துபே, மொயின் அலி, அம்பத்தி ராயுடு ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். கான்வே அரைசதம் அடித்தார்.

மிடில் ஓவர்களில் ராஜஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், சாம்பா, சஹால் ஆகியோர் சென்னைக்கு கடும் நெருக்கடி அளித்தனர்.

கடைசி ஓவரில் 21 ரன் தேவைப்பட்ட நிலையில் தோனியும், ஜடேஜாவும் இருந்தனர். சந்தீப் சர்மா வீசிய அந்த ஓவரில் தோனி அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்க விட்டார்.

எனினும் கடைசி பந்தில் தோனி ஒரு ரன் மட்டுமே எடுத்ததால், 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் த்ரில் வெற்றி பெற்றது.

சென்னை அணியின் கேப்டனாக தோனி ஆடிய 200வது போட்டியில் தோல்வி அடைந்தது, ரசிகர்களை வருத்தமடைய செய்தது.


Next Story

மேலும் செய்திகள்