2 பக்கம் மலை குன்றுகள்...நடுவே ஆர்ப்பரித்து கொட்டும் அருவி

x

கூடலூர் அருகேயுள்ள எம்.ஜி.ஆர் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீரை, சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் முதுமலை பகுதியில் மாலை நேரங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. இதனால் அடர்ந்த வனப்பகுதியின் நடுவே உள்ள எம்.ஜி. ஆர் அருவியில், மழை நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனிடையே காலை மற்றும் மாலை வேளைகளில் வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை, வாகனம் மூலம் அருவிக்கு அருகே அழைத்து சென்று வருகின்றனர். அவ்வாறு அருவிக்கு அருகே செல்லும் சுற்றுலா பயணிகள், அருவியை கண்டு ரசித்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்