பிற்பகல் 2 முதல் இரவு 8 வரை.. டாஸ்மாக் விற்பனை நேரம் குறைப்பு? | tasmac | tamil nadu

x

டாஸ்மாக் மது விற்பனையை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றியமைக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை குறைக்கவும், பள்ளி மாணவர்களுக்கு மதுபான விற்பனை செய்வதை தடுக்க கோரியும் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மது விற்பவர்கள், வாங்குபவர்கள், உபயோகப்படுத்துபவர்களுக்கு காவல் துறையினர் உரிய உரிமம் வழங்கி விற்பனை செய்ய வேண்டும் என்றும் 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்வதில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மது விற்பனையை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்றியமைக்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்து வழக்கை முடித்து வைத்தனர்.

டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை, மாற்றியமைக்க, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பரிந்துரைத்துள்ளது குறித்து மது பிரியர்களின் கருத்துகளை கேட்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்