2 விமானங்கள் மோதியதால் பரபரப்பு - உடைந்து விழுந்த இறக்கை..அதிர்ச்சி சம்பவம்

ஜப்பான் நாட்டில் உள்ள ஓடுபாதையில் 2 விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் தாய்லாந்திற்குப் புறப்படத் தயாராக இருந்த தாய் ஏர்வேசுக்கு சொந்தமான விமானம், தைவானுக்கு புறப்படத் தயாராக இருந்த ஈவா ஏர்வேஸ் விமானத்தின் மீது மோதியது. இதில் தாய் ஏர்வேஸ் விமானத்தின் இறக்கை உடைந்து போனது. இதனால் அவ்விமானத்தின் பயணம் ரத்து செய்யப்பட்டதுடன், பல விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு தாமதமானது.

X

Thanthi TV
www.thanthitv.com