கிணற்றில் மின்மோட்டார் பழுது பார்த்தவர்களுக்கு நேர்ந்த சோகம் | Thoothukudi |

x

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே விவசாயக் கிணற்றின் மீது போடப்பட்டிருந்த சிமெண்ட் தளம் உடைந்ததால், கிணற்றில் விழுந்து 2 பேர் உயிரிழந்தனர்.

ஒட்டப்பிடாரத்தை அடுத்த குலசேகரநல்லூரில் தனிநபருக்குச் சொந்தமான 75 அடி ஆழமுள்ள கிணற்றில், மின்மோட்டார் பழுதானதால், அதனை சரிசெய்யும் பணியில் 4 பேர் ஈடுபட்டிருந்தனர். கிணறு மீது போடப்பட்டிருந்த சிமெண்ட் தளம் உடைந்ததில் 4 பேரும் கிணற்றுக்குள் தவறி விழுந்தனர். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மாரிமுத்து, அரியநாயகம் ஆகிய 2 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மரியதாஸ், சுப்பராஜ் ஆகிய இருவரையும் தீயணைப்பு வீரர்கள் சடலமாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்து ஒட்டப்பிடாரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்