மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்திய சம்பவம் - முக்கிய நபர் கைது

x

மணிப்பூரில் 2 பெண்கள் தொடர்புடைய அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியான நிலையில், இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். மணிப்பூரில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு பெண்களை ஊர்வலமாக அழைத்துச் சென்றது குறித்த அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்நிலையில், இச்சம்பவத்தில் ஹெரா தாஸ் என்ற முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பச்சை நிற சட்டை அணிந்திருந்த அந்த நபரை தௌபல் மாவட்டத்தில் கைது செய்ததாகவும், மேலும் சில நபர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்