பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியான மேலும் 2 உயிர்... தீவிர விசாரணையில் போலீசார்

x

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் படுகாயம் அடைந்த 2 தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

அங்குள்ள கோட்டநத்தம் கிராமத்தில் உரிமம் பெற்று இயங்கி வரும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 80 சதவீத தீக்காயம் அடைந்த மற்ற 2 தொழிலாளர்களுக்கு விருதுநகர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட இரண்டு தொழிலாளர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. பட்டாசு ஆலை விபத்து குறித்து 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த வச்சக்காரப்பட்டி போலீசார், பட்டாசு ஆலை உரிமையாளர் ரமேஷ், ஆலை போர்மேன் சுப்புராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்