நாளை பசும்பொன் செல்லும் 2 அமைச்சர்கள்

x

நாளை பசும்பொன்னில் நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ளமாட்டார் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் பசும்பொன் கிராமத்திற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.

நேற்று இரவு முதல்வர் ஸ்டாலினுக்கு முதுகு வலி ஏற்பட்டதை தொடர்ந்து, நீண்ட பயணங்களைத் தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால் குரு பூஜையில், முதலமைச்சர் சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என் நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்