குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு - திருச்சியில் சோகம்

குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு - திருச்சியில் சோகம்
Published on

திருச்சியில் குளத்தில் மூழ்கிய இரண்டு சிறார்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ராமச்சந்திரா நகரில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய சையது, தனது நண்பன் ஆதிலுடன் சைக்கிள் ஓட்டி பழகிக் கொண்டிருந்தான். நீண்ட தூரம் சென்ற சிறார்கள் நீண்ட நேரமாகியும் வராததால் பெற்றோர்கள் தேடிச் சென்றுள்ளனர். சிறுவர்கள் ஓட்டிச் சென்ற சைக்கிள், அவர்களின் துணி குளக்கரையில் இருப்பதை பார்த்த பெற்றோர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரத்திற்கு பிறகு, இரு சிறுவர்களின் உடலை மீட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே நேரத்தில் 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தெரு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

X

Thanthi TV
www.thanthitv.com